சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டரின் ஸ்கூட்டர் திருடிய 2 பேர் சிக்கினர்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டரின் ஸ்கூட்டர் திருடிய 2 பேர் சிக்கினர்.
சேலம்
சேலம் அழகாபுரம் சிவாயநகரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 40). டாக்டரான இவர், நெய்க்காரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13-ந் தேதி சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்க தனது ஸ்கூட்டரில் வந்தார். ஆஸ்பத்திரி வளாகத்தில் அந்த ஸ்கூட்டர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் பயிற்சி முடிந்து வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் டாக்டர் சரஸ்வதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், அஸ்தம்பட்டியை சேர்ந்த திலீப்குமார் (44), ராணி (49) ஆகியோர் டாக்டரின் ஸ்கூட்டரை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story