பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 பேர் கைது
பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி வடக்கு போலீசார் பர்மா காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சந்தேகத்திற்குரிய ஒரு வீட்டில் புகுந்த சோதனையிட்டனர். அந்த வீட்டில் பாண்டி செல்வி (வயது 38) என்பவர் வறுமையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை பயன்படுத்தி அவர்களை விபசாரத்தில் ஈடுபட செய்து பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பாண்டி செல்வி மற்றும் ராம்சுந்தர் நகரை சேர்ந்த சரவணன் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த பாண்டி செல்வியின் கணவர் மகேஷ்குமார் (52) அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story