மயில்களை விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது
மயில்களை விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள வலசைப்பட்டி வயல் பகுதியில் 4 மயில்கள் இறந்து கிடப்பதாக மாவட்ட வன அலுவலர் பிரபாவிற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் திருப்பத்தூர் வனச்சரகர் சதாசிவம், வனவர் பாண்டியராஜன், வனக்காப்பாளர் கண்ணபிரான் ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று இறந்த மயில்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், அதே ஊரை சேர்ந்த சின்னக்காளை, தர்மராஜ், குமார் ஆகியோர் தேங்காய் குரும்பை மற்றும் ஈசல்களில் விஷம் கலந்து வைத்து மயில்களை கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது ெசய்தனர்.
Related Tags :
Next Story