பள்ளி மாணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது
குண்டடம் அருகே பள்ளி மாணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குண்டடம் அருகே பள்ளி மாணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீவைப்பு
குண்டடம் அடுத்தவேங்கிபாளையத்தை சேர்ந்தவர் வல்பூரால். இவரது பேரன் ஹரி கிருஷ்ணன்(வயது 11). அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவரின் பக்கத்து வீட்டுக்கு பொள்ளாச்சி சுப்பையா கவுண்டன்புதுரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 27) என்பவர் வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த ஹரி கிருஷ்ணனை மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பெட்ரோலை மோகன்ராஜ் முகர்ந்து பார்க்குமாறு கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஹரிகிருஷ்னன் சட்டை மீது பெட்ரோலை ஊற்றி விட்டு பீடி பற்றிய தீக்குச்சியை அவன் மேலே வீசி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
வாலிபர் கைது
இதில் சட்டையில் தீப்பற்றி எரிந்ததில் உடலில் பலத்த காயம் அடைந்த மாணவனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகார் பேரில் மோகன்ராகை கைது செய்த போலீசார் அவரை தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.