கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது


கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது
x

கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சூரமங்கலம்:

சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மெய்யனூர் வி.எம்.ஆர். நகரை சேர்ந்த கார்த்திகேயன் (20) என்ற மாணவர் காயம் அடைந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த விஷ்ணு (21), தாரமங்கலம் பவளத்தானூரை சேர்ந்த திலீபன் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் கைதான விஷ்ணு, திலீபன் மற்றும் ஹரி கிருஷ்ணன், இளவரசன், கார்த்திகேயன், கவுதம், அஜய் ஆகிய 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story