லாட்டரி விற்ற 2 பேர் கைது


லாட்டரி விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரப்பன் மற்றும் போலீசார் நேற்று பொம்மிடி பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அருள் (வயது 31), பையர்நத்தத்தை சேர்ந்த வெங்கடேஷ் (29) என்பதும், அவர்கள் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story