பெண்ணை கொடூரமாக அடித்துக் கொலை செய்த பெயிண்டர் கைது


பெண்ணை கொடூரமாக அடித்துக் கொலை செய்த பெயிண்டர் கைது
x

உடுமலை அருகே பெண்ணை கொடூரமாக அடித்துக் கொலை செய்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

உடுமலை அருகே பெண்ணை கொடூரமாக அடித்துக் கொலை செய்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் படுகொலை

உடுமலையை அடுத்த புக்குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தனா என்கிற தனலட்சுமி (வயது 40). சற்று மன நிலை பாதிக்கப்பட்ட இவர் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்த போது கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பெயிண்டர் கைது

கொலை நடந்த நேரத்தில் சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த செல்போன் சிக்கனல்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'உடுமலை ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் ஆரோக்கிய தாஸ் (31). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவனுக்கு காதல் திருமணம் செய்து 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவன் புக்குளம் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளான். சம்பவத்தன்று நள்ளிரவில் ஆரோக்கியதாஸ் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்த தனலட்சுமியின் தலையில் கல்லால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏரிப்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளான். அத்துடன் மேட்டுப்பாளையத்தில் ெரயிலில் சங்கிலி பறித்த வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இவன் மீது உள்ளது. இவன் கடந்த சில நாட்களுக்கு முன் ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணைத் தாக்கி விட்டு டி.வி.யை திருடியதும் தெரிய வந்துள்ளது என்றனர்.

இதைத்ெதாடர்ந்து ஆரோக்கியதாஸை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை நடந்த 2 நாட்களில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.


Related Tags :
Next Story