சங்ககிரி அருகே வியாபாரியின் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது


சங்ககிரி அருகே வியாபாரியின் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
x

சங்ககிரி அருகே வியாபாரியின் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சங்ககிரி:

மதுரை மாவட்டம் இளமானூரை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 49). இவர் பிளாஸ்டிக் பொருட்களை மோட்டார் சைக்கிளில் வைத்து, ஊர், ஊராக சென்று விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் இரவில் சங்ககிரி அருகே மஞ்சக்கல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தூங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், மோட்டார் சைக்கிளை திருடியது சுண்ணாம்புகுட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் மாதேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை மீட்டனர்.


Next Story