நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது


நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
x

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியில் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் ரோந்து சென்றார். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அய்யனார் (வயது 67), மற்றொருவர் அதேஊர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த தீனதயாளன் (49) என்பது தெரிய வந்தது. இருவரும் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story