சேலம் தாதகாப்பட்டியில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி; 2 பேர் கைது


சேலம் தாதகாப்பட்டியில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி; 2 பேர் கைது
x

சேலம் தாதகாப்பட்டியில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் லைன்மேடு வேலு புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவர் சண்முக நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் பாலமுருகனை திடீரென வழிமறித்து, கத்தியைக்காட்டி மிரட்டி தாக்கினா். அவரிடம் இருந்து ஒரு பவுன் நகை,, ரூ.5 ஆயிரத்து 100 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட, தாதகாப்பட்டி தாகூர் தெரு பகுதியை சேர்ந்த பூபதி (23), சண்முக நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story