அதிக போதைக்காக ரசாயன பொடி கலந்து விற்பனைக்காக வைத்திருந்த148 மது பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது
அதிக போதைக்காக ரசாயன பொடி கலந்து விற்பனைக்காக வைத்திருந்த148 மது பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே அரசு சார்பில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடை அருகில் சத்தியமங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், 'அவர் சிவகங்கை மாவட்டம் குருந்தங்குடியை சேர்ந்த சுரேஷ் (வயது 37) என்பதும், அவர் அதிக போதைக்காக ரசாயன பொடி கலந்த 148 மதுபாட்டில்களை வைத்திருந்ததும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுரேசை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 148 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story