ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது


ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது
x

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரையில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோதமாக செயல்படுபவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் கூடல் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றபோது பாலத்திற்கு கீழே 10 பேர் கும்பல் பதுங்கி இருந்தது. போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி சென்றனர். அதில் 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் பெத்தானியாபுரம் மேட்டு தெரு சூர்யா (வயது 24), பெத்தானியாபுரம், திலீபன் தெரு அசோக்குமார் (22), மேலவாசல் பிரகாஷ் (23), கரிசல்குளம், நேரு காலனி பாலகிருஷ்ணன் (25), கள்ளிக்குடி அருண்குமார் (19), ஆரப்பாளையம், மஞ்சள் மேட்டு காலனி மனோஜ்குமார் (22) என்பதும், கொள்ளையடிக்கும் நோக்கில் அங்கு பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து பெரிய கத்தி, உருட்டு கட்டை, மிளகாய்பொடி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. .


Related Tags :
Next Story