தாரமங்கலத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது


தாரமங்கலத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது
x

தாரமங்கலத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகராட்சி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 30). நெசவுத்தொழிலாளி. இவருடைய தங்கையை, தாரமங்கலம் சர்க்கரை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த சந்தானகோபாலுக்கு (38) திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்தநிலையில் சந்தானகோபால் சரியாக வேலைக்கு செல்லாமல், மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை கங்காதரன் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சந்தானகோபால் நேற்று கங்காதரனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த கங்காதரன் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் சந்தானகோபாலை கைது செய்தனர்.


Next Story