அன்னதானப்பட்டியில் இரும்பு பட்டறை உரிமையாளரிடம் வழிப்பறி செய்தவர் கைது


அன்னதானப்பட்டியில் இரும்பு பட்டறை உரிமையாளரிடம் வழிப்பறி செய்தவர் கைது
x

அன்னதானப்பட்டியில் இரும்பு பட்டறை உரிமையாளரிடம் வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் நெத்திமேடு கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 28), இரும்பு பட்டறை உரிமையாளர். இவர் நேற்று அன்னதானப்பட்டி அகரமகால் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், இளவரசனை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, தாக்கியதுடன், அவரிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், ரூ.2,100 பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் வழிப்பறியில் ஈடுபட்டது, அயோத்தியாப்பட்டணம் மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம் என்ற அய்யாவு (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மோதிரம், செல்போன், பணம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story