பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வாலிபர் கைது


பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வாலிபர் கைது
x

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள உமா மகேஸ்வரபுரம் சாலையில் வீரசோழன் ஆற்று கரை மதில் சுவர் அருகே சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 2 பேர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் குண்டு வீசப்பட்ட இடத்தில் சோதனை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த ராவணன் மகன் சரண்ராஜ் (வயது21) என்பவர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story