சேலத்தில் பெண்களை மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில்  பெண்களை மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
x

சேலத்தில் பெண்களை மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஓமலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கடந்த மாதம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இதை பார்த்த சேலம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் அந்த பெண்ணிடம் தான் குடும்ப நண்பர் என்றும், நீ ஆண் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றால் இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவ கல்லூரி பகுதிக்கு வருமாறு தெரிவித்தார்.

இதை நம்பி அந்த பெண்ணும் அங்கு சென்றார். அப்போது அங்கு சரவணன் திடீரென அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். போலீசார் விசாரணையில், அவர் இதேபோல் பல பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி உள்ளிட்ட சில போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்.

இதை பரிசீலித்து சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.


Next Story