ஜவுளிக்கடையில் திருடிய வாலிபர் கைது


ஜவுளிக்கடையில் திருடிய வாலிபர் கைது
x

ஜவுளிக்கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நலம்பள்ளியில் குடிப்பட்டி சாலையில், ஜவுளிக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம கும்பல் ஒன்று புகுந்து கடையில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஜவுளி துணி மற்றும் கல்லாவில் இருந்து ரொக்கம் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றது. இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜவுளி கடையில் திருடிய மர்மகும்பலை, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து போலீசார் தேடிவந்தனர். இதில் இந்த திருட்டு தொடர்பாக, நல்லம்பள்ளியை சேர்ந்த மாஸ்கோ என்ற ஷர்வான் (வயது 19) என்ற வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர்.


Next Story