அம்மாபேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற தொழிலாளி கைது


அம்மாபேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

முனியப்பன் கோவில்

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் பகுதியில் பாலமரத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுச்சுவர் கிடையாது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கோவிலுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. அதனால் அந்த வழியாக சென்றவர்கள் கோவிலுக்குள் சென்றார்கள். அப்போது மர்ம நபர் ஒருவர் கோவில் முன்பு குத்தப்பட்டு இருந்த சூலாயுதத்தை எடுத்து, உண்டியலை உடைத்துக்கொண்டு இருந்தான். அவனை பிடிக்க பொதுமக்கள் ஓடினார்கள். ஆனால் அதற்கு அவன் தப்பி ஓடிவிட்டான்.

தொழிலாளி கைது

இதுகுறித்து கோவில் பூசாரி அம்மாசை அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று மதியம் பயிற்சி இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றார்கள். அப்போது ஊமாரெட்டியூரை அடுத்த கோலக்காரனூர் பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் இந்திராநகரை சேர்ந்த மாதையன் (வயது 36) என்பதும், கட்டிட தொழிலாளியான இவர்தான் முனியப்பன் கோவிலுக்குள் உண்டியலை உடைக்க முயன்றதும் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாதையனை போலீசார் கைது செய்தார்கள்.



Related Tags :
Next Story