ஒகேனக்கல்லில் போலீசுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது


ஒகேனக்கல்லில் போலீசுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
x

ஒகேனக்கல்லில் போலீசுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அஞ்செட்டி சாலையில் ஒகேனக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராசு மற்றும் போலீசார் கடந்த 13-ந் தேதி ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலம்பாடி அருகே ரோந்து சென்றபோது, ஒகேனக்கல் நாடார் கொட்டாய் பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 40), அல்லிமுத்து (29) ஆகிய 2 பேரும் போலீசை பார்த்ததும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் செல்வராசு, ஒகேனக்கல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தங்கவேல் மற்றும் அல்லிமுத்து ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story