திருச்செங்கோட்டில் வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்ட 4 பேர் கைது
நாமக்கல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் சீதாராம்பாளையம் மாலா கோவில் சுடுகாட்டில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த சிறுவன் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சீதாராம் பாளையம் பகுதியை சேர்ந்த மோகன்வேல்(வயது 21), சசிகுமார்(20) மற்றும் 17, 19 வயதுடைய 2 சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story