மறியலுக்கு முயன்ற 56 பேர் கைது
மறியலுக்கு முயன்ற 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. காரைக்குடி பழைய பஸ் நிைலயத்தில் இருந்து ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சிலை நோக்கி வந்தனர். போலீசார் அவர்களை மறித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, காரைக்குடி நகர செயலாளர் சிவாஜி காந்தி, ஏ.ஐ.டி.யூ.சி.மாவட்ட செயலாளர் ராஜா உள்பட 56 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story