புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் காவேரிப்பட்டணம் பனகல் தெருவில் குட்கா விற்ற சாந்தபுரத்தை சேர்ந்த சலாவுதீன் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் அச்சமங்கலம் கூட்டு ரோட்டில் 2 கடைகளில் பர்கூர் போலீசார் நடத்திய சோதனையில் குட்கா இருந்தது தெரியவந்தது. அதை விற்றதாக ஏ.நாகமங்கலத்தை சேர்ந்த வேணுகோபால் (40), ஜெகதேவி சாலை அசோக்குமார் (60) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போச்சம்பள்ளியில் 4 ரோட்டில் குட்கா விற்ற எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தெய்வம் (66) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story