காவலாளியை தாக்கிய அண்ணன்-தம்பி கைது


காவலாளியை தாக்கிய அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவலாளியை தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே பழங்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு பேராவூரை சேர்ந்த கருப்பன் (வயது 70) என்பவர் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் கடையை திறந்து மதுஎடுத்து தா என்று கேட்டுள்ளனர். அவர் தான் காவலாளி என்றும் நாளை வந்து மது வாங்கி கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கருப்பனை கீழே தள்ளி மிதித்து தாக்கினர். மேலும், பட்டாகத்தியை எடுத்து தலையில் தாக்கினர். கருப்பன் செல்போனை எடுத்து போலீசுக்கு தகவல்தெரிவிக்க முயன்றபோது செல்போனை பறித்து உடைத்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் மேலாளர் மணிகண்டபிரபு அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளியை தாக்கியதாக பேராவூர் சந்திரகுமார் மகன் நவீன் (22), அவரது தம்பி ஆகாஷ் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அஜய் என்பவரை தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story