பவானிசாகர் அருகே, வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது
பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரகசிய தகவல்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகர் பகுதியில் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்து உள்ளதாக பவானிசாகர் மாவோயிஸ்டு தனி பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்ததும், முருகன் நகர் பகுதிக்கு போலீசார் சென்று திடீர் ேசாதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீட்டின் பின்புறம் உள்ள முட்புதர் காட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டனர். பின்னர் அந்த வீட்டில் இருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
கைது
விசாரணையில், 'அவர் அந்த பகுதிைய சேர்ந்த கூலித்தொழிலாளியான வெள்ளிங்கிரி (வயது 30) என்பதும், அவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்ததும்,' தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வெள்ளிங்கிரியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.