இருதரப்பினர் மோதல்; 5 பேர் படுகாயம்-4 பேர் கைது


இருதரப்பினர் மோதல்; 5 பேர் படுகாயம்-4 பேர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இருதரப்பினர் மோதல்

பூவந்தி அருகே மடப்புரம் விலக்கு எம்.ஜி.ஆர். நகரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் முத்திருளாண்டி (வயது 31). இவரது பெட்டிக்கடையில் இதே பகுதியைச் சேர்ந்த தனபால் (26), புவனேஸ்வரன் (25) உள்பட சிலர் அடிக்கடி வந்து சிகரெட், தண்ணீர்பாட்டில் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் முத்திருளாண்டியின் உறவினரான ஊராட்சி மன்ற உறுப்பினர் மலைச்சாமி (51) என்பவர் புவனேஸ்வரனின் தந்தை பொன்னுச்சாமியிடம் தங்கள் மகன் அடிக்கடி வந்து பெட்டிக்கடையில் பிரச்சினை செய்கிறார், கண்டித்து வையுங்கள் என கூறியுள்ளார். இது பற்றி அறிந்ததும் புவனேஸ்வரன், தனபால் உள்பட சிலர் கடைக்கு சென்று அங்கிருந்த முத்திருளாண்டி, உறவினர்கள் மலைச்சாமி, வள்ளி (50), முத்துராஜா (34) ஆகியோரை அவதூறாக பேசி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். மலைச்சாமியின் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்.

4 பேர் கைது

இது குறித்து மலைச்சாமி பூவந்தி போலீசில் தனபால், புவனேஸ்வரன், பொன்னுப்பாண்டி, ரகு என்ற ரகுவரன், முனீஸ்வரன், செல்வகுமார், தவச்செல்வம் ஆகிய 7 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதேபோல் புவனேஸ்வரன் தன்னையும் தனது சித்தப்பாவையும் தாக்கியதாக மலைச்சாமி உள்பட 3 பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் ஆகியோர் இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். தனபால், பொன்னுப்பாண்டி(45), ரகு என்ற ரகுவரன் (30), தவச்செல்வம் (26) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் ரத்தக்காயம் அடைந்த மலைச்சாமி, வள்ளி, முத்திருளாண்டி, முத்துராஜா, புவனேஸ்வரன் ஆகிய 5 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


Related Tags :
Next Story