கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

திருப்புவனம்

பூவந்தியில் இருந்து மேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தனியார் பழத்தோட்டம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அபியன்தன் (வயது26), பதுதன் (24), ராஜேஷ் (26) ஆகிய 3 பேரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவும், ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு ெசய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story