அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது- லாரிகள் பறிமுதல்
அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே காயாஓடை கிராமத்தில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அனுமதியின்றி இரண்டு டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் அழகர் (வயது33), கண்டுப்பட்டியை சேர்ந்த அந்தோணி மகன் சவரிமுத்து சந்தோஷ் (27), காளையார்கோவில் சுப்பிரமணி மகன் தெய்வக்கண்ணன்(40) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அழகர் மற்றும் சவரிமுத்து சந்தோஷை கைது செய்தனர்.
Related Tags :
Next Story