புகையிலை பொருட்கள் விற்ற 12 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 12 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2023 12:30 AM IST (Updated: 17 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், மத்திகிரி, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,083 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story