பள்ளிபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் கைது


பள்ளிபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் கைது
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 2:12 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் நகராட்சியில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிக்கு பூமிபூஜை நடந்தது. அப்போது அங்கு வந்த பா.ஜனதாவினர் மத்திய அரசின் திட்டப்பணி பூமிபூஜை நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி படம் இடம்பெற வில்லை என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து போலீசார், பா.ஜனதாவினரை கைது செய்தனர்.


Next Story