வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது


வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
x

வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே உள்ள அரக்கன் கோட்டை பஸ் நிறுத்தம் அருகில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 4 சாக்கு மூட்டைகள் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அவற்றில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வேனை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 33) என்பது தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், இவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி அரக்கன்கோட்டை மற்றும் வாணிப்புத்தூர் பகுதிகளில் பள்ளிக்கூடம் அருகே உள்ள பெட்டி கடைகளில் வைத்து விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 46.780 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் 15 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story