ஆட்டோ டிரைவரை கொன்ற 2 பேர் கைது


ஆட்டோ டிரைவரை கொன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ேதவகோட்டையில் ஆட்டோ டிரைவரை ெகான்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

தேவகோட்டை,

ேதவகோட்டையில் ஆட்டோ டிரைவரை ெகான்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆட்டோ டிரைவர் கொலை

தேவகோட்டை அழகாபுரி நடுத்தெருவில் வசிப்பவர் வெங்கடாசலம். இவருடைய மகன் சரவணன் (வயது 36). ஆட்டோ டிரைவர்.இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரவணன் ஆட்டோ சவாரிக்காக நேற்று முன்தினம் மாலை கண்டதேவி சாலையில் வாரச்சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆட்டோவை திடீரென்று நிறுத்தினார். ஆட்டோ பின்னால் வந்த தேவகோட்டை அருணகிரிபட்டினம் ஜெயபாண்டி (44) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோவில் மோதியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபாண்டி ஆட்டோ டிரைவர் சரவணனை சரமாரியாக அடித்து உதைத்தார். இதைத்தொடர்ந்து ஜெயபாண்டியுடன் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர் மெக்கானிக் பழனியப்பன் (40) என்பவரும் அங்கு வந்தார். இருவரும் சேர்ந்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பலியானார்.

2 பேர் கைது

இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் 2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் 2 பேரையும் போலீசார் கைது செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இருவரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story