வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த 25-ந்தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை வரிச்சூரை சேர்ந்த செக்கடியான் (வயது 38), சிவகங்கை மாவட்டம் மழவராயனேந்தலை சேர்ந்த பெண் போலீஸ் புவனேஸ்வரியின் கணவர் மோகன சுந்தரேஸ்வரன் (35) ஆகியோரை வாளால் தாக்கி நகை மற்றும் செல்போன், பணம் ஆகியவற்றை 3 வாலிபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை துணைபோலீஸ் சூப்பிரண்டு சிபிசாய் சவுந்தர்யன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், நாகராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் விசாரணை நடத்தி சிவகங்கை அடுத்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற சந்தோஷ்(23), அழுபிள்ளை தாங்கி கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பில்லூரை சேர்ந்த பாலமுருகன்(22) என்பவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story