வாலிபர் மீது தாக்குதல்; தந்தை-2 மகன்கள் கைது


வாலிபர் மீது தாக்குதல்; தந்தை-2 மகன்கள் கைது
x

வாலிபரை தாக்கிய தந்தை, அவருடைய 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை ஆத்திகுளம், அங்கையற்கண்ணி காலனியை சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு ராம் (வயது 24). இவரது தாத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். அதற்கான இறுதிசடங்குகளை கே.புதூர், பாண்டியன் நகரை சேர்ந்த அந்தோணி (52) என்பவர் செய்தார்.

பின்னர் அவர் பேசியதற்கு மேல் கூடுதலாக பணம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவருக்கும், ஸ்ரீ விஷ்ணு ராமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அந்தோணி தனது மகன்களுடன் சேர்ந்து ஸ்ரீவிஷ்ணுராமை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்தனர்.


Related Tags :
Next Story