லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
மொரப்பூர்:
கடத்தூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை யாரேனும் விற்பனை செய்கிறார்களா என கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடத்தூரில் இருந்து பொம்மிடி செல்லும் சாலையில் வாலிபர் ஒருவர் கையில் வெள்ளைத்துண்டு சீட்டினை வைத்து கொண்டு அதை அந்த வழியாக செல்வோரிடம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் தர்மபுரி அக்ரகார தெருவை சேர்ந்த ராஜா மகன் தமிழ்ச்செல்வன் (வயது 24) என்பதும், இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு எண்ணை துண்டு சீட்டில் எழுதி வைத்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.30 மதிப்புள்ள 6 லாட்டரி சீட்டுகள் மற்றும் அவரிடமிருந்த ரூ.3 ஆயிரத்து 240-யை பறிமுதல் செய்தனர்.