அஞ்செட்டி அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் தகராறு; 6 பேர் கைது
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் ஜீன்மநத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் மோகன் (வயது 21) என்பவர் தனது தங்கையுடன் இருசக்கர வாகனத்தில் ஜீன்மநத்தம் பிரிவு சாலையில் சென்றபோது அங்கு நின்ற மரலிங்கா (38) என்பவர் மீது எதிர்பாரதவிதமாக மோதியது. அதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்ற மோகன் தனது ஆதரவாளர் தேவராஜ் மற்றும் சிலர் சென்று மரலிங்காவை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த மரலிங்கா தனது ஆதரவாளர்களை அழைத்து கொண்டு மோகன் வசிக்கும் பகுதிக்கு சென்றார்.
அப்போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் அரிவாள், இரும்பு, கம்பிகளால் தாக்கி கொண்டனர். இதில் ரவி (33), அபி (20), மது (25), பசம்மா (28), குமார் (32), சிவம்மா (28), கங்காதரன் (15), சிபு (27), ஜெயா (26) ஆகிய 9 பேர் காயமடைந்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மரலிங்கா அஞ்செட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மோகன் (21), கைலாஷ் (28), சுந்தரமூர்த்தி (24), கிருஷ்ணன் (44), சென்னகுமார் (37), மாதையன் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அதேபோல் தேவராஜ் தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் மரலிங்கா, ரவி, வெங்கடசாலபதி, சிவா, குமார், அபி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.