மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை போலீஸ் சரக பகுதியில் அனுமதியின்றி காரில் வைத்து மதுபானங்கள் விற்பதாக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அகரமாங்குடி பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை சுற்றி வளைத்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது காரில் ஏராளமான மதுபான பாட்டில்கள் அடுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து காரை ஓட்டி வந்த அகர மாங்குடியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 29) என்பவரிடம் நடத்திய விசாரணையில் காரில் மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந்தராஜை கைது செய்த போலீசார் 30 மதுபான பாட்டில்களையும், செல்போன் மற்றும் மதுபான விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆனந்த ராஜ் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story