கிருஷ்ணகிரி மாவட்டத்தில்புகையிலை பொருட்கள், குட்கா விற்ற 28 பேர் கைதுசூதாடிய 14 பேர் மீது வழக்கு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்புகையிலை பொருட்கள், குட்கா விற்ற 28 பேர் கைதுசூதாடிய 14 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 May 2023 12:30 AM IST (Updated: 2 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள், குட்கா விற்பனை செய்த 28 பேரை கைது செய்த போலீசார், பணம் வைத்து சூதாடிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குட்கா, லாட்டரி விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அப்போது குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்டவை விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,200 மதிப்புள்ள குட்கா பறிமுதல்செய்யப்பட்டது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 900 ரூபாய் மற்றும் 14 லாட்டரி சீட்டுகளை பறிமுதல்செய்தனர்.

சூதாட்டம்

இதேபோல் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் மத்தூர், ஓசூர் சிப்காட், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை பகுதிகளில் பணம் வைத்து சூதாடியதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 700 மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story