இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் உள்பட 5 பேர் கைது
திருப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்த இந்திய ஜனநாயக கட்சி மாநகர் மாவட்ட தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி-மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்த இந்திய ஜனநாயக கட்சி மாநகர் மாவட்ட தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி-மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது பற்றி ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பயங்கர ஆயுதங்களுடன்...
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் காரில் பயங்கர ஆயுதங்களுடன் வலம் வருவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அற்புதம் உள்ளிட்ட போலீசார் போயம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் பட்டாக்கத்தி, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ஏராளமான மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இ்து தொடர்பாக காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
5 பேர் கைது
இதில் அவர்கள் இந்திய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவரான ராக்கியாபாளையம் வி.ஜி.வி. விஜய் கார்டன் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 37), ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த ஆனந்த் (30), காலேஜ் ரோட்டை சேர்ந்த கதிரேசன் (40), குமார்நகரை சேர்ந்த பழனிக்குமார் (34), சத்யாநகரை சேர்ந்த ராஜ்குமார் (34) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து 5 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.