கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 28 பேர் கைதுசூதாடிய 11 பேர் பிடிபட்டனர்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 28 பேர் கைதுசூதாடிய 11 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 28 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் வைத்து சூதாடிய 11 பேர் பிடிபட்டனர்.

தீவிர சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை, பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறதா? என கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அந்த வகையில் கஞ்சா வைத்திருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்கரடிகுறி கே.பூசாரிப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (வயது 28), பர்கூர் ஒப்பதவாடி அருகே உள்ள வரமலைகுண்டா சின்னப்பா (71), அஞ்செட்டி அருகே கரிச்சித்தமனூர் மாதேவன் (35), தேன்கனிக்கோட்டை தாலுகா மாருப்பள்ளி அருகே குனிக்கல் மஞ்சுநாத் (35), கொப்பகரை அருகே லிங்கம்பட்டடி திம்மராயன் (67) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,500 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா பறிமுதல்

அதேபோல் பணம் வைத்து சூதாடியதாக சூளகிரி தாலுகா மேலுமலை அருகே உள்ள ஒட்டையனூர் நாகராஜன் (48), எர்ரண்டப்பள்ளி முனிராஜ் (34), கலுகோபசந்திரம் வினோத் (25), ராஜா (33), சமியுல்லா (41), பென்சுப்பள்ளி சுதாகர் (33), ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை மாரியப்பன் (39), கொப்பகரை சந்திரன் (36), கெலமங்கலம் ஸ்ரீதர் (34), முருகேஷ் (42), கணேஷ்பாபு (35) ஆகிய 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,440 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தடை செய்யப்ட்ட குட்கா விற்பனை செய்ததாக சின்னகனகம்பட்டி சேகர் (60), மத்தூர் கவியரசு (32), அம்மன் கோவில்பதி மாதேஷ் (52), சின்ன கொத்தூர் சென்னம்மா (50), லாலிக்கல் கோபால் (65), கெலமங்கலம் ஆசீப் (27) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி சீட்டுகள்

அதேபோல் மாவட்டத்தில் லாட்டரி விற்ற ஒன்னம்பாளையம் ராஜசேகர் (39), கந்திகுப்பம் முனியப்பன் (54), கெங்கிநாயக்கன்பட்டி கருணாகரன் (50), போச்சம்பள்ளி பாண்டியன் (48), காவேரிப்பட்டணம் அய்யப்பன் (48) உள்பட மொத்தம் 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 135 லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரூ.2,700 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story