மீன் கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது


மீன் கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2023 12:30 AM IST (Updated: 8 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்தூர்:

போச்சம்பள்ளி தாலுகா குள்ளம்பட்டி அருகே கே.புதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). மீன் கடை வைத்துள்ளார். கடந்த 6-ந் தேதி இவரது கடைக்கு பர்கூர் தாலுகா தொகரப்பள்ளி அருகே பூகுட்டை பகுதியை சேர்ந்த முனியப்பன் (24) என்பவர் மீன் வாங்க வந்தார். அப்போது முனியப்பன், சதீஷ்குமார் கடை முன் எச்சில் துப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து சதீஷ்குமார் தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது முனியப்பன், அவரது நண்பர்கள் அருள் (21), சச்சிக் (26) ஆகியோர் சேர்ந்து சதீசை தாக்கினர். இதில் காயமடைந்த சதீஷ்குமார் சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் முனியப்பன், அருள் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story