கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 18 பேர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, லாட்டரி, குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அப்போது சிங்காரப்பேட்டை, குருவிநாயனப்பள்ளி, ஓசூர், பாகலூர், தொட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் குட்கா விற்பனை செய்த 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1,600 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்தனர். மேலும் லாட்டரி சீட்டு விற்றதாக 2 பேரை கைது செய்த போலீசார் ரூ.300 மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story