ராமேசுவரம் கோவில் பணியாளர் கைது


ராமேசுவரம் கோவில் பணியாளர் கைது
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவில் பணியாளர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் ஜே.ஜே. நகரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்தும் இடத்தில் சந்தேகப்படும்படியாக நிறுத்தப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சொகுசு கார் ஒன்றை கடந்த 5-ம் தேதி மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் இணைந்து சோதனை செய்தனர். அந்த காரில் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 158 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காரில் வந்த கடத்தல்காரர்கள் யார்? யாருக்காக கஞ்சா கொண்டுவரப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வேலை பார்க்கும் கரையூர் கிராமத்தை சேர்ந்த தொகுப்பூதிய பணியாளராக வேலை பார்க்கும் தனசேகரனை (வயது 31) பிடித்து விசாரித்தனர். அதில் காரில் வந்த நபர்கள் காரை நிறுத்தி விட்டு அவரிடம் பார்த்து கொள்ளுமாறும் கூறிவிட்டு சென்றனராம். ஆனால் இது குறித்து தனசேகரன், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்து விட்டதால் அவர் மீது நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக புதுரோடு பகுதியை சேர்ந்த ஒருவரைபோலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story