பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்தனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா மருதங்குடி கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையில் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மேலக்கோட்டை கணேசன்(வயது 53), குணபதி மங்கலம் செல்லத்துரை(60), மாவூர் உதயகுமார்(45), மங்களம் நாகராஜ்(65), சேமனிவயல் காளிமுத்து(62), தினையத்தூர் பாண்டி(42), கங்கானரேந்தல் மாரிமுத்து(60) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.6 ஆயிரத்து 850 பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story