கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டுகள் விற்ற 12 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டுகள் விற்ற 12 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா என்பதை மாவட்ட போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தில் ஓசூர், ஊத்தங்கரை, பர்கூர், கந்திகுப்பம், கே.ஆர்.பி., அணை, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்ற, 10 பேரை கைது செய்து அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா, 14 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்டில் லாட்டரி விற்ற வீரப்பன் நகரை சேர்ந்த மாதேஷ் (36) என்பவரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர். ஊத்தங்கரை அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்ற சுரேஷ் (35), என்பவரை ஊத்தங்கரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story