சாராயம், மது விற்பனை ; 3 நாட்களில் 105 பேர் கைது


சாராயம், மது விற்பனை ; 3 நாட்களில் 105 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2023 12:45 AM IST (Updated: 17 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் சாராயம், மது விற்பனை செய்ததாக 3 நாட்களில் மட்டும் 105 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்

திருவாரூரில் சாராயம், மது விற்பனை செய்ததாக 3 நாட்களில் மட்டும் 105 பேர் கைது செய்யப்பட்டனர்.

105 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் சாராயம், மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதில் சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டதாக 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 105 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எச்சரிக்கை

மேலும் வடூவூர், ஓவேல்குடி ஆகிய பகுதிகளில் சாராயம் தயாரித்த 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாருஸ்ரீயிடம், போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்துள்ளார். மாவட்டம் முழுவதும் மதுவிற்பனைக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story