லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் சிக்கினர்


லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காவேரிப்பட்டணம்:

பாரூர் போலீசார் அரசம்பட்டி, புலியூர் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பாரூரை சேர்ந்த சக்தி (வயது 38), புலியூர் பாபுஜான் (62), பலனம்பாடியை சேர்ந்த சிவசங்கரன் (70) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story