மயிலாடுதுறையில், கந்து வட்டி வசூலித்தவர் கைது


மயிலாடுதுறையில், கந்து வட்டி வசூலித்தவர் கைது
x

மயிலாடுதுறையில், கந்து வட்டி வசூலித்தவர் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை, ஜூன்.12-

மயிலாடுதுறையில், கந்து வட்டி வசூலித்தவர் கைது செய்யப்பட்டார்.

வட்டிக்கு கடன்

மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 47). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை காமராஜர் தெருவை சேர்ந்த ஜவகர்(40) என்பவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக சில மாதங்கள் வட்டி கட்டி உள்ளார்.

அதன் பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாகவும், குடும்ப பிரச்சினை காரணமாகவும் வட்டி கட்ட முடியாமல் செல்வம் தவித்து வந்துள்ளார்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வந்த ஜவகர் வட்டியுடன் பணத்தை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்று கேட்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் விசாரணை நடத்தி கந்து வட்டி வசூல் தடை சட்டத்தின் கீழ் ஜவகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். பின்னர் அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.


Next Story