இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 82 பேர் கைது


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்  82 பேர் கைது
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 82 பேர் கைது

திருப்பூர்

பல்லடம்,


விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்காத பா.ஜ.க அரசை ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்திய கம்யூனிஸ்டுகட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல்லடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட துணை செயலாளர் ரவி, பல்லடம் ஒன்றிய செயலாளர் சாகுல்அமீது ஆகியோரின் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கொசவம்பாளையம் ரோடு பிரிவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறும்போது " இதில் அரிசி, எண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி, பண மதிப்பிழப்பு, ரயில்வே உள்ளிட்ட பொது நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பாதது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழர்கள் காட்டும் ஆர்வத்தை ஆணவம் என்று மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியது, மணிப்பூர் கலவரம், பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு வன்மத்துடன் தாக்குதல் தொடுப்பது, 12 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழி மேம்பாட்டிற்கு ரூ.11.86 கோடியை ஒதுக்கும் ஒன்றிய அரசு, சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழிக்கு ரூ.198.83 கோடியை ஒதுக்கி பாரபட்சம் காட்டுவதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது என்றனர்.

சாலை மறியல் போராட்டத்தால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து பல்லடம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 82பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.



Next Story