போர்மேன் கைது


போர்மேன் கைது
x

பட்டாசு ஆலை விபத்தில் போர்மேனை கைது செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கர கோட்டை ஊராட்சி மார்க்கநாதபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மார்க்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயசித்ரா (வயது 24) என்ற பெண் பலியானார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை உரிமையாளர் சிவகாசியை சேர்ந்த கேசவன் (50) என்பவரை தேடி வருகின்றனர். எலுமிச்சங்காய்பட்டியை சேர்ந்த போர்மேன் முனியசாமியை (41), இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் கைது செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story