கோர்ட்டில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு


கோர்ட்டில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

கடந்த 2016-ம் ஆண்டு சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் முகமது பரகத்துல்லா. இவர் இன்ஸ்பெக்டராக பணி புரிந்த போது திருத்தங்கல் போலீஸ் நிலையம் உட்பட்ட பகுதியில் 6 மாத குழந்தையை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்தது தொடர்பாக குழந்தையின் தந்தை மீது வழக்கு பதிவு செய்தார். தற்போது இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பணி மாறுதல் காரணமாக இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சாட்சியளிக்க கூடுதல் மாவட்ட நீதிமன்றம் சார்பில் பலமுறை சம்மன் அனுப்பியும் இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா வழக்கில் சாட்சி சொல்ல வரவில்லை. இதனால் அவருக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத் பிடிவாரண்டு பிறப்பித்து நேற்று உத்தரவிட்டார்.


Next Story